தேசியம்
செய்திகள்

குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது

Manitobaவில் குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகள் வன்முறை, கடத்தல் விசாரணை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 34 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என RCMP தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக RCMP, 65 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

இவர்களினால் பாதிக்கப்பட்ட இரண்டு 15 வயது சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

குறைந்தது மேலும் ஒரு 13 அல்லது 14 வயது சிறுமி இவர்களினால் பாதிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

அந்தச் சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் RCMP ஈடுபட்டுள்ளது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரில் Markham நகரில் உள்ள ஒரு தெரு

Lankathas Pathmanathan

COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford

Lankathas Pathmanathan

Leave a Comment