September 29, 2026
தேசியம்
செய்திகள்

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரியின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (04) நடைபெற்றது.

இறுதி நிகழ்வுகளில் OPP அதிகாரி Grzegorz Pierzchala, அவரது குடும்பத்தினர், நண்பர்களினால் நினைவு கூறப்பட்டார்.

வாழ்வின் ஒரு உத்வேகமாக இருந்த தனது சகோதரர் ஒரு வீரனாக இறந்தார் என அவரது சகோதரி இறுதி நிகழ்வில் நினைவு கூர்ந்தார்.

Ontario ஆளுநர் நாயகம் Elizabeth Dowdeswell, மாகாண முதல்வர் Doug Ford, OPP ஆணையர் Thomas Carrique உட்பட பல முக்கியஸ்தர்களும் காவல்துறை அதிகாரிகளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

December 27ஆம் திகதி Hagersville நகருக்கு அருகில் OPP அதிகாரி Grzegorz Pierzchala சுடப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து 30 வயதான பெண், 25 வயதான ஆண் ஆகியோர் முதலாம் நிலை கொலை குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Related posts

Tumbler Ridge அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சித் தலைவர்கள்!

Lankathas Pathmanathan

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment