September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

கனேடிய விமானப் பயண துறையில் போட்டியின் அவசியத்தை புதிய ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் மத்தியில் இந்த கருத்து வெளியானது

புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் Jagmeet Singh புதன்கிழமை (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை முன்வைத்தார்.

விமானப் பயண துறையில் போட்டி இல்லாத காரணத்தினால் விமானப் பயணங்களின் செலவும் அதிகரித்து செல்வதாக Jagmeet Singh கூறினார்.

இந்த நிலையில் மாற்றத்தை செய்வதற்கான வழிகளை கண்டறிய அவர் Liberal அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் சிறந்த மேற்பார்வை இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் போக்குவரத்து அமைச்சர் Omar Alghabraவிடம் அழைப்பு விடுத்தார்.

Related posts

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

Gaya Raja

நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும்: பசுமை கட்சியின் தலைவி வலியுறுத்தல்!

Gaya Raja

Leave a Comment