தேசியம்
செய்திகள்

மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த ஆண்டு மரணம்: புதிய அறிக்கை

மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு மரணமடைந்தனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கனடாவில் அதிகரித்து வரும் மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் மரணங்கள் குறித்து ஒரு இந்த புதிய அறிக்கை எச்சரிக்கையை எழுப்புகிறது.

பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவான SecondStreet.org இந்த அறிக்கையை வெளியிட்டது.

April 2024 முதல் March 2025 வரை கனடாவில் அறுவை சிகிச்சைகள் அல்லது நோயறிதல் நடைமுறைகளுக்காகக் காத்திருந்தபோது குறைந்தது 23,746 நோயாளிகள் இறந்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமானதாகும்.

மேலும் 2018 முதல் பதிவான மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்களின் மொத்த  எண்ணிக்கையை இது 100,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட மாகாண, பிராந்திய சுகாதார அமைப்புகளுக்கு அனுப்பப்பட்ட தகவல் சுதந்திர (freedom of information – FOI) கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்துள்ளதாக SecondStreet.org கூறுகிறது.

கனடாவின் பல பகுதிகலில் இருந்து பகுதியளவு தரவு மட்டுமே கிடைத்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

Alberta, Manitoba-வின் சில பகுதிகள் எந்த தரவுகளையும் வழங்கவில்லை என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதனால் உண்மையான மொத்த மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

Ontario-வில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கலின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

Ontario 10,634, Quebec 6,290, British Columbia 4,620 என முதல் மூன்று மாகாணங்களாக மரணங்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment