தேசியம்
செய்திகள்

14 Alberta சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம்?

Alberta அரசாங்கத்தின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெறுதல் மனுக்களை – recall petitions – எதிர்கொள்கின்றனர்.

ஐக்கிய Conservative கட்சியின் (UCP) சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இந்தத் திரும்பப் பெறுதல் மனுக்களை எதிர்கொள்வதாக Alberta தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Alberta-வில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வாக்காளர்களால் முன்னெடுக்கப்படும் இந்த திரும்பப் பெறுதல் முயற்சிகள் முதல்வர் Danielle Smith-தின் ஐக்கிய Conservative கட்சியின் கட்சியின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை (25) Alberta தேர்தல் திணைக்களம் ஐந்து UCP சட்டமன்ற உறுப்பினர்களுக்கான திரும்பப் பெறுதல் மனுக்களை அங்கீகரித்தது.

திங்கட்கிழமை (24) ஆறு பேருக்கான திரும்பப் பெறுதல் மனுக்களை தேர்தல் திணைக்களம் அங்கீகரித்தது.

இதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இதில் முதல்வர் Danielle Smith-தின் அமைச்சரவை உறுப்பினர்களும் Alberta சட்டமன்ற சபாநாயகரும் அடங்குகிறார்.

இந்தத் திரும்பப் பெறுதல் மனுக்களை அமைச்சர்கள் Searle Turton, Nathan Neudorf, Rajan Sawhney, Myles McDougall, Dale Nally, RJ Sigurdson, Demetrios Nicolaides ஆகியோருடன் இணை அமைச்சர் Muhammad Yaseen, சட்டமன்ற சபாநாயகர் Ric McIver, துணை சபாநாயகர் Angela Pitt, சட்டமன்ற உறுப்பினர்கள் Jason Stephan, Jackie Lovely, Glenn Van Dijken, Nolan Dyck ஆகியோர் எதிர்கொள்கின்றனர்.

முன்னாள் முதல்வர் Jason Kenney-யின் தலைமையின் கீழ் இருந்த ஐக்கிய Conservative அரசாங்கம் 2021-ஆம் ஆண்டு இந்த திரும்பப் பெறும் சட்டத்தை நிறைவேற்றியது.

இது தொகுதி மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்க மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கிறது.

கடந்த தேர்தலின் போது தேர்தல் தொகுதிகளில் பதிவான வாக்குகளில் குறைந்தது 60 சதவீத வாக்காளர்கள் கையொப்பங்களை சேகரிக்க February 23-ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்கும் David Johnston?

Lankathas Pathmanathan

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

Gaya Raja

Leave a Comment