September 7, 2026
தேசியம்
செய்திகள்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் திட்டம் முழுமையானது அல்ல: Mark Carney

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம் முழுமையானது அல்ல என கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.

G20 உச்சி மாநாட்டுக்காக உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்கள் தென்னாப்பிரிக்காவில் கூடியுள்ளனர்.

அங்கு உக்ரைன் குறித்து பேசுவதற்காக சனிக்கிழமை  (22) பத்துக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் சந்தித்தனர்.

வரலாற்றில் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றை தனது நாடு எதிர்கொள்கிறது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy எச்சரித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கனடாவுடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஆணையம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பின்லாந்து, ஸ்பெயின், நோர்வே, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

இந்த சந்திப்பின் பின்னர் உலகத் தலைவர்களுடன் இணைந்து உக்ரைன் குறித்து Mark Carney ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதியின்  திட்டம் குறித்த கருத்து வெளியானது.

“எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக் கூடாது என்ற கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என உலகத் தலைவர்களின் கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டிற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய 28 அம்ச திட்டத்தை ஏற்க November 27 வரை உக்ரைனுக்கு  Donald Trump அவகாசம் அளித்தார்.

அமெரிக்காவும் Russia-வும் இணைந்து வரைந்த இந்த திட்டம், Vladimir Putin-னின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை பூர்த்தி செய்கின்றன.

ஆனாலும் அது உக்ரைனுக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை மாத்திரம் வழங்குகின்றது.

அமெரிக்கா புறக்கணிக்கும் G20 உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

LJI Reporter ரம்யா சேது

Related posts

ஒரு மாதத்தை அண்மிக்கும் Canada Post வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

Gaya Raja

Leave a Comment