September 24, 2026
தேசியம்
செய்திகள்

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh புதன்கிழமை (02) சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு  கனடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துகளை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயல்முறைக்கும், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் இந்த சந்திப்பில் Eric Walsh வெளிப்படுத்தினார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், நாட்டில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கும் புதிய ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இந்த சந்திப்பில்  Eric Walsh பாராட்டு தெரிவித்தார்.

Related posts

வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னர் விமான நிலைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

Lankathas Pathmanathan

காலாவதியாகும் உரிமை கோரப்படாத $70 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

புதிய அமைச்சரவையில் பாதிக்கும் மேல் புதிய முகங்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment