தேசியம்
செய்திகள்

கனடாவின் தேக்க நிலை வாழ்க்கைத் தரத்திற்கு புதிய குடியேற்ற வாசிகளே காரணம்: அமெரிக்க துணை ஜனாதிபதி குற்றச்சாட்டு

கனடாவின் தேக்க நிலை வாழ்க்கைத் தரத்திற்கு புதிய குடியேற்ற வாசிகளே காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance குற்றம் சாட்டினார்.

கனடாவின் அரசியல் தலைமை, குடியேற்ற முறை உள்ளிட்ட விடயங்களை விமர்சித்து தொடர்ச்சியான பதிவுகளை அவர் வெள்ளிக்கிழமை (21) வெளியிட்டார்.

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டில் பிறந்த அனைத்து மக்களாலும் எமது வாழ்க்கை தரங்கள் தேக்க நிலையில் உள்ளன என JD Vance கூறினார்.

கனடாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பன்முகத்தன்மை என்ற பெயரில் இந்த நிலையை உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கனடாவின் தற்போதைய வாழ்க்கைத் தரத்திற்கு அமெரிக்க வர்த்தகம், பொருளாதாரக் கொள்கை காரணம் என்ற எந்த ஒரு கருத்தும் முற்றிலும் தவறானது எனவும் JD Vance குறிப்பிட்டார்.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பதிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க கனடாவின் குடிவரவு, அகதிகள் குடியுரிமை அமைச்சர் அலுவலகம் மறுத்துவிட்டது.

COVID தொற்றுக்கு பிந்தைய கால தொழிலாளர் பற்றாக்குறையின் போது குடியேற்றம் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து, முன்னாள் கனடிய பிரதமர் Justin Trudeau அரசாங்கம் குடியேற்றத்தை குறைக்கத் ஆரம்பித்தது.

பிரதமராக Mark Carney பதவியேற்பதற்கு முன், கனடாவின் மக்கள் தொகையில் தற்காலிக குடியிருப்பாளர்கள் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நகர்வுகளை Liberal அரசாங்கம் எடுத்திருந்தது.

குடியேற்றத்தை இன்னும் நிலையான நிலைகளுக்கு கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என இந்த மாத ஆரம்பத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, நிதியமைச்சர் François-Philippe Champagne தெரிவித்திருந்தார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி தாரியும் பலி

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

Leave a Comment