தேசியம்
செய்திகள்

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொடரும் கடுமையான பனிப்புயல் காரணமாக Quebec, Ontario, British Colombia ஆகிய மாகாணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

Quebec முழுவதும் மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (23) மாலை வரை 3.5 மில்லியன் என Hydro Quebec அறிவித்துள்ளது.

இவர்களுக்கு மின்சார இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணியில் மாகாணம் முழுவதும் சுமார் 1,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்

Quebec City, மாகாணத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

Ontario மாகாணத்தின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள சுமார் 70 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Ottawa பகுதியில் 8,600 பேர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Ontarioவின் பல பகுதிகளில் 100 KM வேகத்தில் காற்று வீசும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்திருந்தது.

Related posts

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan

சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது!

Gaya Raja

Ontarioவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment