September 13, 2026
தேசியம்
செய்திகள்

Calgary நகர முன்னாள் முதல்வர் உள்ளிட்டவர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP விசாரணை?

Calgary நகர முன்னாள் முதல்வர், தற்போதைய, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் நகர முதல்வர் Jyoti Gondek, தற்போதைய முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

Calgary நகரின் 10-வது நகர வட்டார சபை உறுப்பினர் Andre Chabot, முன்னாள் நகரசபை உறுப்பினர் Sean Chu, முன்னாள் நகர முதல்வர் Jyoti Gondek ஆகியோருடன்  இந்தப் புகாருடன் தொடர்புபட்டு இருப்பது செவ்வாய்க்கிழமை (24) தெரியவந்தது.

இதில் வேறு சிலரும் இணைக்கப்பட கூடிய வாய்ப்புள்ளது என கூறப்பட்டாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த விசாரணை எதைப் பற்றியது என்பது குறித்து தனக்குத் தெரியாது என Jyoti Gondek செவ்வாயன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த விசாரணையில் தான் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் நகரசபை உறுப்பினர் Shamsher Kothari காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

கடந்த இலையுதிர் காலத்தில், நகராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதில் முதல் கட்ட புகார் Calgary காவல்துறையில் பதிவானதாக தெரியவருகிறது.

Calgary காவல்துறை இந்தப் புகாரை RCMP  -யின் கவனத்திற்கு கடந்த வருடம் October மாதம் கொண்டு சென்றதை உறுதிப்படுத்தியது.

இதில் எவருக்கும் எதிராகவும் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

இடியுடன் கூடிய மழையின் காரணமாக தெற்கு Ontarioவில் மூவர் பலி

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment