தேசியம்
செய்திகள்

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

கடுமையான பனிப் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவு, மழை பலத்த காற்று காரணமாக Quebec , Ontario ஆகிய மாகாணங்களில் விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன் நெடுஞ்சாலைகள் பலவும் மூடப்பட்டன.

40 சதவீதமான விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (23) மாலை Pearson சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக அமெரிக்காவிற்குள் செல்லும் அனைத்து Niagara பாலங்களும் மூடப்பட்டுள்ளன.

நெடுந்தெரு 401இல் 100 வாகனங்கள் வரை விபத்துக்குள்ளான சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

London நகருக்கும் Tilbury நகருக்கும் இடையில் நெடுஞ்சாலை 401 இல், 100 வாகனங்கள் பல விபத்துக்களில் சிக்கியுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை 402 இல் 50 முதல் 60 வாகனங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.

401/402 நெடுந் தெருக்களில் பல வாகன விபத்துகள் நிகழ்ந்த போதிலும்  கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என OPP கூறுகிறது.

Related posts

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்

Lankathas Pathmanathan

கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது தடுப்பூசி Torontoவில் வழங்கல்

Lankathas Pathmanathan

Sarnia நகரில் இயங்கி வந்த இரசாயன ஆலை மூடப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment