September 23, 2026
தேசியம்
செய்திகள்

700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Bell கனடா

கனடாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான Bell கனடா 700 பணிநீக்க அறிவித்தலை வெளியிட்டது.

பெரும்பாலும் மேலாளர்களான சுமார் 690 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அண்மைய நகர்வில் Bell கனடா அறிவித்துள்ளது .

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பணி நீக்கங்களைத் தொடர்ந்து இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்முறை நாடு முழுவதும் சுமார் 650 தொழிற்சங்கமற்ற நிர்வாகப் பதவிகளை நீக்குவதாக Bell கனடா கூறுகிறது.

இந்த எண்ணிக்கை அதன் பணியாளர்களில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களை குறிக்கிறது.

தனது ஊடக பிரிவில் சுமார் 40 பதவிகளை குறைப்பதாகவும் Bell கனடா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Bell கனடா 1,200 தொழிற்சங்க ஊழியர்களுக்கு பணி நீக்க சலுகைகளை  வழங்கியது.

தொலைத் தொடர்பு துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் இந்த நடவடிக்கைக்கு காரணம் என Bell கனடா கூறியிருந்தது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment