தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் பங்கேற்காததை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்

வரவு செலவுத் திட்டம் குறித்த நம்பிக்கை வாக்களிப்பில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs பங்கேற்காததை அவரது அலுவலகம் நியாயப்படுத்துகிறது.

சிறுபான்மை Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை (17) நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 170 வாக்குகள், எதிராக 168 வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்களிப்பில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால், இந்த முக்கிய வாக்கெடுப்பை Shannon Stubbs தவறவிட்டதாக செவ்வாய்க்கிழமை (18) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவரது அலுவலகம் தெரிவித்தது.

இதில் வாக்களிக்கத் தவறியதற்காக சமூக ஊடகங்களில் Shannon Stubbs-க்கு எதிராக பல கோபமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சிலர் அவர் ஒரு துரோகி எனவும் கடுமையாக விமர்சித்தனர்.

கடந்த இலைதுளிர் காலத்தில் நடைபெற இருந்த தாடை அறுவை சிகிச்சைக்கு பின்னர் Shannon Stubbs மருத்துவ விடுப்பில் உள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

Shannon Stubbs கடுமையான ஓய்வில் இருப்பதாகவும், அவர் குணமடையும் போது பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Mark Carney-யின் வரவு செலவுத் திட்டத்தை Shannon Stubbs கடுமையாக எதிர்க்கிறார் எனவும் அவரது அலுவலகம் மேலும் கூறியது.

Related posts

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Quebec NDP நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

Sturgeon நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment