தேசியம்
செய்திகள்

மாகாண முதல்வர்களை சந்தித்த பிரதமர்

மாகாண முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை  (17)  நடைபெற்றது.

பிரதமருடன் பயனுள்ள சந்திப்பொன்றை நடத்தியதாக New Brunswick முதல்வர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிறுத்திய பின்னர் நடந்த முதல் மெய்நிகர் சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பில் மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்தும், அமெரிக்காவுடன் tariff கட்டண பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக New Brunswick முதல்வர் Susan Holt தெரிவித்தார்.

New Brunswick மீதான அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறிப்பிட்ட Susan Holt, மத்திய அரசிடமிருந்து ஒரு உதவித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியதாக கூறினார்.

இதுபோன்ற ஒரு திட்டம் குறித்த அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என Ontario மாகாண முதல்வர்  Doug Ford கூறினார்.

இந்தத் திட்டங்கள் குறித்த மேலதிக விவரங்களுக்கு கனடிய பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பதில் எதுவும் கிடைக்கவில்லை.

Related posts

World Series 2025: ஐந்தாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

Lankathas Pathmanathan

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் புதிய வரி குறித்து கனடிய பிரதமர் முன்னரே அறிந்திருக்கவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment