September 23, 2026
தேசியம்
செய்திகள்

நாடாளாவிய ரீதியில் நடைபெற்றது முதல்குடி இராணுவத்தினர் தினம்

நாடாளாவிய ரீதியில் உள்ள முதல்குடி இராணுவத்தினரை கனடியர்கள் கௌரவிக்கின்றனர்.

முதல்குடி இராணுவத்தினர் தினத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை (08)  நிகழ்வுகள் நடைபெற்றன.

கனடாவின் ஆயுதப் படைகளில் பணியாற்றிய, தொடர்ந்து பணியாற்றும் ஆயிரக்கணக்கான முதல்குடி, Inuit, Métis இராணுவத்தினருக்கு இந்த நிகழ்வுகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வரலாறு முழுவதும் தொடரும் முதல்குடி இராணுவ உறுப்பினர்களின் தியாகங்களை அங்கீகரித்து மத்திய அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.

Toronto-வில் நடைபெற்ற முதல்குடி இராணுவத்தினர் தினத்தைக் குறிக்கும் ஒரு பொது நிகழ்வில் கனடிய ஆளுநர் நாயகம் Mary Simon உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Winnipeg, வடக்கு Vancouver போன்ற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

20-ஆம் நூற்றாண்டில் கனடிய இராணுவத்தில் சுமார் 12,000 முதல்குடியினர்  பணியாற்றியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சிலர் சேவையில் இருந்த காலத்தில் தங்கள் உயிரை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

சுற்றுச் சூழல் கனடாவினால் நாடளாவிய ரீதியில் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும்: கனடிய பிரதமர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment