September 27, 2026
தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: Steven MacKinnon

Liberal அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என தான் நம்புவதாக அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon தெரிவித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில் இந்தக் கருத்து வெளியானது.

பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (04) சமர்பித்தார்.

பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இரண்டு ஆசனங்கள் குறைவாக உள்ள Liberal, வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது.

தங்கள் தொகுதிகளில் ஒரு வாரம் கழித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் Ottawa திரும்பும்போது, November 17-ஆம் திகதி  மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு Liberal அரசின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கான முக்கிய தீர்மானமாக அமைகிறது.

எதிர்க்கட்சி ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், கனடியர்கள் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

பெரும்பான்மைக்கு ஒரு சில ஆசனங்கள் குறைவாக இருந்தாலும், இந்த வரவு செலவு திட்டத்தை முன் வைக்க தங்களுக்கு ஒரு ஆணை உள்ளது என நம்புவதாக  Steven MacKinnon தெரிவித்தார்.

இதற்கிடையில், Conservative, Bloc Québécois கட்சிகள் ஏற்கனவே இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என  கூறியுள்ளன.

தவிரவும் தங்கள் ஆதரவுக்கு பேச்சுவார்த்தைக்கு உட்படாத பல நிபந்தனைகளை அவர்கள் தனித்தனியாக வகுத்துள்ளனர்.

NDP, அதன் பங்கிற்கு, வரவு செலவுத் திட்டம் குறித்து எவ்வாறு வாக்களிப்பது குறித்த முடிவை இன்னும் யோசித்து வருவதாகக் கூறுகிறது.

Related posts

Ontario மாகாணத்தை மீண்டும் தாக்கும் பனிப்புயல்

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளிடமிருந்து ஆதரவைத் தேடும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment