September 2, 2026
தேசியம்
செய்திகள்

Liberal அரசின் பற்றாக்குறையின் அளவு குறித்து Pierre Poilievre விமர்சனம்!

மத்திய அரசின் பற்றாக்குறையின் அளவு குறித்து Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre கேள்வி எழுப்பினார்.

கடந்த செய்வாய்க்கிழமை (04) சமர்ப்பிக்கப்பட்ட Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை (07) Pierre Poilievre விமர்சித்து உரையாற்றினார்.

கனடாவின் பொருளாதாரக் கழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த உரை நிகழ்ந்தது.

கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் Conservative கட்சி முன்வைத்த சில திட்டங்களை மீண்டும் வலியுறுத்திய அவரது உரை, தடையற்ற சந்தை நெறிமுறையை ஆதரித்தது.

இந்த ஆண்டுக்கான $78.3 பில்லியன் பற்றாக்குறையை கடுமையாக விமர்சித்த Pierre Poilievre, இது கனடிய வரி செலுத்துவோரின் மீதான இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சுமை என கூறினார்.

Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் November 17-ஆம் திகதி ஆரம்பாகும் வாரத்தில் வாக்கெடுப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால், அது பொதுவாக ஒரு தேர்தலை தூண்டும் சாத்தியக்கூறு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்பது வயது கனடிய சிறுமியின் மரணத்தில் தந்தை கைது

Lankathas Pathmanathan

தமிழின அழிப்பை எதிர்கொண்ட தமிழர் சமூகம் நீதிக்காக காத்திருக்கும் சோக நிலை தொடர்கிறது: Pierre Poilievre

Lankathas Pathmanathan

தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து  விலகி இருக்க ஹரி ஆனந்தசங்கரி முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment