September 15, 2026
தேசியம்
செய்திகள்

வர்த்தக விதிகளை மதிக்கும் நாடு கனடா: Mark Carney

வர்த்தக விதிகளை கனடா மதிக்கிறது என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

தென்கிழக்கு நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்ளவும், கனடாவுக்கு எதிராக மேலதிகமாக 10 சதவீத வரியை விதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ASEAN உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney, அங்கு Donald Trump நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கையை மறைமுகமாக விமர்சித்தார்.

அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் அல்லது ஜனாதிபதியை நேரடியாக குறிப்பிடாமல் கனடிய பிரதமரின் இந்த விமர்சனம் வெளியானது.

நாங்கள் விதிகள் சார்ந்த அமைப்பை மதிக்கிறோம். வர்த்தக ஒப்பந்தங்கள், சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். அனைத்து வகையிலான சுதந்திரமான பரிமாற்றத்தை மதிக்கிறோம் என ASEAN உச்சி மாநாட்டில் ஊடகவியலாளர்களிடம்  Mark Carney கூறினார்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அடைந்த முன்னேற்றத்தில் தொடர்ந்து பணியாற்ற கனடிய அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ASEAN உச்சி மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இந்த உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அங்கு இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் Donald Trump-புடன் நேரடி சந்திப்பு எதுவும் திட்டமிடபடவில்லை என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

கனடிய பிரதமரை இந்த மாநாட்டில் சந்திக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் Donald Trump கூறினார்.

Related posts

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment