தேசியம்
செய்திகள்

World Series 2025: இரண்டாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

World Series 2025 தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் Los Angeles Dodgers அணி வெற்றி பெற்றது.

இம்முறை World Series தொடரில் Toronto Blue Jays அணியை Dodgers அணி எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி வெள்ளிக்கிழமை (24) வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் இரண்டாவது  ஆட்டம் சனிக்கிழமை (25) இரவு Rogers மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 5 க்கு  1 என்ற ஓட்ட வித்தியாசத்தில் Dodgers அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் 1 க்கு 1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்த தொடரின் மூன்றாவது ஆட்டம் திங்கட்கிழமை (27) இரவு Dodger மைதானத்தில் நடைபெறுகிறது.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal வேட்பாளர் நியமனத்தில் முன்னாள் Progressive Conservative தலைவரின் புதல்வன் ஆர்வம்?

Lankathas Pathmanathan

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவு 10 சதவீதத்தால் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment