தேசியம்
செய்திகள்

அமெரிக்காவின் புதிய வரி குறித்து கனடிய பிரதமர் முன்னரே அறிந்திருக்கவில்லை?

அமெரிக்க ஜனாதிபதியின் கனடாவுக்கு எதிரான புதிய வரி உயர்வு குறித்து கனடிய பிரதமருக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

கனடா மீது மேலதிகமாக 10 சதவீத வரியை Donald Trump சனிக்கிழமை (25) அறிவித்தார்.

இந்த அறிவித்தல் குறித்து, Mark Carney-க்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என மூத்த கனடிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தென்கிழக்கு நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் Mark Carney இந்த வர்த்தகப் போர் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதிலிருந்து பிரதமரும், ஜனாதிபதியும் பேசவில்லை என Mark Carney -யுடன் பயணம் செய்யும் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரங்களை Ontario அரசாங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்ளவும், மேலதிகமாக 10 சதவீத வரியை அறிவிக்கும் முடிவை Donald Trump எடுத்தார்.

இந்த நிலையில், கனடிய மத்திய அரசு அமெரிக்காவுடன் உரையாடலை தொடர்வதில் கவனம் செலுத்துகிறது என கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

Related posts

மூலதன ஆதாய திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment