தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June 26?

Toronto நகருக்கு புதிய நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தல் June மாதம் 26ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் April 3 ஆம் திகதி ஆரம்பமாகி May 12 ஆம் திகதி முடிவடையும்.

முன்கூட்டிய வாக்குப்பதிவு June 8ஆம் திகதி முதல் June 13ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத் தேர்தல் திகதி நகர சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இந்த அங்கீகாரம் March 29ஆம் திகதி நடைபெறும் நகர சபை கூட்டத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory கடந்த வாரம் விலகிய நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 13 மில்லியன் டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario மாகாணத்தில் ஒரு நாள் அனைத்து பொதுப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன!

thesiyam

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!