கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து Donald Trump நம்பிக்கை தெரிவித்தார்.
கனடியப் பிரதமருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் பணியாற்றி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
இந்த ஒப்பந்தம் கனடியர்களால் சிறந்த வரவேற்பைப் பெறும் என தான் நம்புவதாக Donald Trump தெரிவித்தார்.
கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சந்திப்பு செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.
வெள்ளை மாளிகையில் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு இணக்கப்பாடுகள் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்தது.
இந்த சந்திப்பு எந்த ஒரு உறுதியான முடிவுகளையும் வழங்கவில்லை என சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, இது ஒரு “வெற்றிகரமான,” “நேர்மறையான,” “பயனுள்ள”சந்திப்பு என வகைப்படுத்தினார்.
அமைச்சர் Dominic LeBlanc தவிர, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், தொழில்துறை அமைச்சர் Melanie Joly, இயற்கை வள அமைச்சர் Tim Hodgson, அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman ஆகியோரும் Mark Carney-உடன் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்புக்காக, Mark Carney திங்கட்கிழமை (06) அமெரிக்கா பயணமானார்.
கனடிய பிரதமரின் இந்தப் பயணம் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய பொருளாதார, பாதுகாப்பு உறவில் முன்னுரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த May மாதத்தின் பின்னர் இரு நாட்டின் தலைவருக்கும் இடையே வெள்ளை மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உயர்மட்ட, நேரடி சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பில் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த தனது அச்சுறுத்தல்களை மீண்டும் ஒருமுறை Donald Trump வெளிப்படுத்தினார்.
Mark Carney ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர் எனத் தெரிவித்த Donald Trump, அவரை ஒரு சிறந்த பிரதமர் எனவும் கூறினார்.
இந்த சந்திப்பின் முன்னதாக, இரு தரப்பு பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக Donald Trump கூறியிருந்தார்.
