September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் புதிய fentanyl czar நியமனம்

கனடாவின் புதிய fentanyl czar பதவிக்கு Kevin Brosseau நியமிக்கப்பட்டார்.

பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்தார்.

முன்னாள் RCMP துணை ஆணையரான அவர், சட்ட அமுலாக்கம், தேசிய பாதுகாப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

அமெரிக்க ஜனாதிபதியின் எல்லை குறித்த கவலைகளை தணிக்கவும், கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரை இடைநிறுத்தவும் இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தனது புதிய பதவியில், fentanyl கடத்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க அமெரிக்க அதிகாரிகள், கனடிய சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் Kevin Brosseau பணியாற்றுவார்.

கடந்த ஆண்டு வடக்கு எல்லையில் 19.5 கிலோ கிராம் fentanyl பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்க, எல்லை பாதுகாப்பு (U.S. Customs and Border Protection – CBP) நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

Gaya Raja

நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment