September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு: குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாடு?

Alberta-வின் முன்மொழிவு குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Alberta மாகாண முதல்வர் Danielle Smith இந்தத் தகவலை வெளியிட்டார்.

கனடிய பிரதமர் அமெரிக்காவுக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, Alberta மாகாண முதல்வரை திங்கட்கிழமை (06)  சந்தித்தார்.

இந்த சந்திப்பில் முன்மொழியப்பட்ட bitumen குழாய்த் திட்டத்திற்கான Alberta-வின் முன்மொழிவு திட்டம் தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு பிரதமர் Mark Carney உறுதியளித்துள்ளார்.

November 16-ஆம் திகதிக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக Danielle Smith கூறினார்.

கனடாவை ஒரு எரிசக்தி வல்லரசாக மாற்றுவது உட்பட கலந்துரையாட பல விடயங்கள் உள்ளதாக இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தெரிவித்தார்.

Related posts

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

கனடிய ஏற்றுமதியாளர்கள் தங்கள் வருவாயில் பாதியை இழக்க நேரிடும் சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan

பிரதமர் பதவியில் இருந்து உத்தியோக பூர்வமாக விலகினார் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment