September 22, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க Donald Trump மீண்டும் வலியுறுத்தல்?

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

பெயர் குறிப்பிடப்படாத சில கனடிய அதிகாரிகளிடம், அமெரிக்காவுடன் 51-வது மாநிலமாக இணைவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கூறியதாக Donald Trump செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.

அமெரிக்கா Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி வருவதாக கூறிய Donald Trump, அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால் கனடாவும் இதில் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

இரண்டு  நாடுகளையும் ஒன்றாக இணைப்பது அர்த்தமுள்ளதாக அமையும் எனவும் அவர் கூறினார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா இணைவது குறித்த தனது கருத்தை Donald Trump மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த இந்தக் கருத்து Mark Carney பிரதமரான பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto-வை உலுக்கிய ‘100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை’: இயல்பு நிலைக்கு திரும்பும் நகரம்!

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் நடந்த வேண்டும்: Jagmeet Singh வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி இரத்த உறைவினால் Ontarioவில் முதலாவது மரணம்!

Gaya Raja

Leave a Comment