யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கனடாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Toronto நகரில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (28) கூடிய கனடிய தமிழர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேசத் தமிழ் சமூகம் பதிவு செய்யும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் அமைந்தது.
தவிரவும் Brampton மாநகர முதல்வர் Patrick Brown, உருவச் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.
Chinguacousy பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் நின்று அவர் தனது கண்டன செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
