தேசியம்
செய்திகள்

Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் 151 வீடுகள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன

Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் சுமார் ஒரு வாரமாக கட்டுப்பாட்டை இழந்து எரிந்து வரும் காட்டுத்தீ வியாழக்கிழமை (02) மீண்டும் அதிகரித்தது.

Barrington Lake பகுதியில் 21 ஆயிரத்து 515 hectare பரப்பளவில் இந்த தீ பரந்துள்ளதாக இயற்கை வளத்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடினமான நிலையிலும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக அவர் கூறினார்.

இந்த பகுதியில் மாத்திரம் தீயின் காரணமாக 151 வீடுகள் அழிந்துள்ளன அல்லது சேதப்பட்டுள்ளன.

தீயின் காரணமாக வியாழன் பிற்பகல் வரை சுமார் 6 ஆராயிரத்து 700 பேர் இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை வெளியானது

Lankathas Pathmanathan

Ontarioவின் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment