தேசியம்
செய்திகள்

இங்கிலாந்தில் உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் Mark Carney

பிரதமர் Mark Carney இங்கிலாந்தில் உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.

இந்தப் பயணத்தை அவர் வியாழக்கிழமை (25) ஆரம்பித்தார்.

இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் வெள்ளிக்கிழமை (26) அங்கு  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

வர்த்தகம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரதான இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிரவும் உக்ரைன்-ரஷ்யா யுத்தம், இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம், பரஸ்பர பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்தும் இந்தப் பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும்.

Mexico நகரத்திற்கும், New York நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கும் அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில் கனடிய பிரதமரின் இங்கிலாந்துக்கான இந்த பயணம் அமைகிறது.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment