தேசியம்
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கிறது!

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை அறிவித்தது.

மத்திய வங்கியின் இந்த வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை (17)  வெளியானது.

முக்கிய வட்டி விகிதத்தை 2.5 சதவீதமாக குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது.

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 2.5 சதவீதமாக குறைப்பதாக தனது அறிவித்தலில் கூறியது.

இந்த ஆண்டு March மாதத்தின் பின்னர் மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைப்பது இதுவே முதல் முறையாகும்.

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முடிவுகளில் 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருந்த நிலையில் இந்த வட்டி விகித அறிவிப்பு வெளியானது.

கனடாவின் தொழிலாளர் சந்தையில் ஏற்படும்  மாற்றம் இந்த வட்டி விகித குறைப்புக்கான காரணமாக மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித முடிவு October மாதம் வெளியாக உள்ளது.

Related posts

6 மாகாணங்கள், பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கை நடைமுறையில்

Lankathas Pathmanathan

Ontarioவிற்கு உதவிகளை அனுப்ப முடிவு செய்துள்ள மத்திய அரசு!

Gaya Raja

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

Lankathas Pathmanathan

Leave a Comment