September 9, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் இந்த வாரம் Mexico பயணம்

பிரதமர் Mark Carney இந்த வாரம் Mexico-வுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வியாழன் (18) வெள்ளிக்கிழமைகளில் (19) இந்த பயணத்தை பிரதமர் மேற்கொள்கிறார்.

Mexico நகருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அங்கு Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum-மை சந்திக்கவுள்ளார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்புக்காக Claudia Sheinbaum அழைப்பு விடுத்திருந்தார்.

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, வர்த்தகம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரில் இருந்து தங்கள் பொருளாதாரங்களை பாதுகாக்க இரு நாடுகளும் முயற்சிக்கும் நிலையில், இந்த வாரம் கனடா – Mexico நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.

கடந்த மாதம், கனடிய நிதியமைச்சர் Francois-Philippe Champagne, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் Mexico நகரில் சந்திப்புகளை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய சில்லறை விற்பனை November மாதத்தில் சரிவு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment