தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைவர் Bonnie Crombie பதவி விலகல்!

Ontario மாகாண Liberal கட்சித் தலைவர் Bonnie Crombie பதவி விலகுகிறார்.

புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுத்தவுடன் கட்சி தலைமையில் இருந்து விலகுவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தார்.

Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம் வார விடுமுறையில் நடைபெற்றது.

Toronto-வில் கூடிய Liberal கட்சி தலைமைத்துவ வாக்கெடுப்பை நடத்தியது.

இதில் Bonnie Crombie குறைந்த அளவிலான ஆதரவை மாத்திரை பெற்றார்.

புதிய தலைமைப் போட்டியை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த கேள்விக்கு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதில் 57 சதவீதம் பேர் புதிய தலைமை போட்டிக்கு  ஆதரவாக வாக்களித்தனர்.

Ontario Liberal கட்சியின் அரசியலமைப்பின்படி Bonnie Crombie தலைவராக நீடிக்க  50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவைப்பட்டன

ஆனால் Bonnie Crombie 66 சதவீதத்திற்கு குறைவாக வாக்குகளைப் பெற்றால் அவர் பதவி விலக வேண்டும் என சில கட்சி உறுப்பினர்கள் கோரி வந்தனர்.

ஆரம்பத்தில் தலைவராக நீடிக்க திட்டமிட்டுள்ளதாக Bonnie Crombie கூறினார்.

இப்போது ஒரு தலைமைப் போட்டி கட்சிக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்கு பின்னர் அவர் தனது முடிவை மாற்றினார்.

Related posts

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

Alberta இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

அநேக மாகாணங்கள், பிராந்தியங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment