September 29, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

அமெரிக்காவின் வரிகளை கனடா தவிர்க்க முடியும் என்பதற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை போன்ற கனடிய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளின் பின்னரும் இந்த விடயத்தில் அமெரிக்காவிடமிருந்து எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் David McGuinty கூறினார்.
நாங்கள் தொடர்ந்து நடைமுறைகளை செயல்படுத்துவோம் என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வியாழக்கிழமை (20)  அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்கும் Donald Trumpபின் அச்சுறுத்தலில் இருந்து கனடாவுக்கு இந்த மாத ஆரம்பத்தில் 30 நாட்கள் அவகாசம்  கிடைத்தது.
கனடிய அமெரிக்கா எல்லையை பாதுகாக்க புதிய உறுதிமொழிகளை கனடா அளித்த நிலையில் இந்த அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனாலும் இந்த வரிகள் March 4 முதல் நடைமுறைக்கு வரும் சாத்தியக்கூறு உள்ளது.
மற்றொரு வரி காலக்கெடு நெருங்கி வந்தாலும், அவற்றைத் தவிர்க்க முடியும் என “இன்னும் மிகவும் நம்பிக்கையுடன்” இருப்பதாக அமைச்சர் David McGuinty கூறினார்.

Related posts

அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் இரண்டாவது மாதமாக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan

Leave a Comment