தேசியம்
செய்திகள்

சர்ச்சைக்குரிய Greenbelt திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகல்

Ontario மாகாண வீட்டுவசதித்துறை அமைச்சர் Steve Clark பதவி விலகியுள்ளார்.

வார விடுமுறையில் தனது பதவி விலகல் கடிதத்தை Steve Clark வெளியிட்டார்.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்ட இடமாற்ற சர்ச்சைக்கு மத்தியில் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து Leeds-Grenville-Thousand Islands and Rideau Lakes தொகுதியின்  மாகாண சபை உறுப்பினர் பதவியில் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதவி விலகலை Ontario முதல்வர் Doug Ford ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சிகள் இந்த பதவி விலகளை ஆதரித்துள்ளன.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என தனது புதிய அறிக்கையில் அண்மையில் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்திருந்தார்.

இந்த நிலையில் Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமை பணியாளர் கடந்த வாரம் பதவி விலகியிருந்தார்.

இதனை தொடர்ந்து வீட்டுவசதித்துறை அமைச்சரின் பதவி விலகல் அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Ontario மாகாண அரசாங்கம் Greenbelt திட்டத்தை கையாண்ட விதம் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Rideau ஆற்றில் விழுந்த பதின்ம வயது இளைஞர் மரணம்

Lankathas Pathmanathan

Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Gaya Raja

கனடாவின் முதற்குடியினரிடம் மன்னிப்பு கோரினார் போப்பாண்டவர்

Leave a Comment