தேசியம்
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்

நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன.

கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இந்த அமர்வில் பிரதமர் Mark Carney முதல் முறையாக நாடாளுமன்றத்தில் Conservative  தலைவர் Pierre Poilievre-ரை எதிர்கொள்கிறார்.

கடந்த மாதம் Alberta-வில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், Pierre Poilievre மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்கிறார்.

இந்தத் கூட்டத் தொடரின் முதல் சில வாரங்கள், Mark Carney அரசாங்கம் அடுத்த மாதம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை  தாக்கல் செய்வதை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சிக்கன நடவடிக்கைகள், முதலீடுகள் இடம்பிடிக்கும் என Mark Carney கூறியுள்ளார்.

 

Related posts

கனடாவை இறுதி இலக்காக கொண்டு பயணித்தோம் – நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தேசியத்திற்கு செவ்வி

Lankathas Pathmanathan

Brampton நகர துப்பாக்கிச் சூடு குறித்து இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment