புதன்கிழமை (21) நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கம் வெற்று பெற்றுள்ளது.
ஓரு புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழுவை உருவாக்குவது குறித்த Conservative கட்சியின் முன்மொழிவின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு ஆதரவாக 180 வாக்குகளும் எதிராக 146 வாக்குகளும் பதிவாகின.
NDP, பசுமை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிறுபான்மை Liberal அரசாங்கம் ஆட்சியமைத்து புதன்கிழமையுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வெற்றி பெறாவிட்டால் Liberal அரசாங்கம் தனது ஆட்சியை இழக்கும் அபாயமும் மீண்டும் தேர்தல் ஒன்று நடைபெறும் சாத்தியக்கூறும் தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது