September 14, 2026
தேசியம்
செய்திகள்

Tariff வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்? 

அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பின் பின்னர் tariff வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளதாக கருதுவதாக கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

அமைச்சர் Dominic LeBlanc அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick-ஐ செவ்வாய்க்கிழமை (26) சந்தித்தார்.

எல்லை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்காவின் வர்த்தக செயலாளரை சந்தித்தார்.

அமெரிக்க வர்த்தக செயலாளருடன் சந்திப்புக்குப் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக உணர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்க பொருட்கள் மீதான வரிகள் சிலவற்றை கனடா கைவிடுவதாக பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (22) அறிவித்த சில நாட்களின் பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Related posts

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

Gaya Raja

April 5ஆம் திகதிக்கு பின்னர் கனடாவில் மிகக் குறைந்த COVID தொற்று பதிவு !

Gaya Raja

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Leave a Comment