தேசியம்
செய்திகள்

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

வியாழக்கிழமை கனடாவில்  …..

கனடா – அமெரிக்கா எல்லை விரைவில் மூடப்படும்

கனடா – அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு  வார இறுதிக்குள் மூடப்படும் என கனடியப் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். வெள்ளி அல்லது  சனிக்கிழமைக்குள் எல்லை மூடப்படும் என பிரதமர் கூறினார். இதேவேளை தொடர் இரத்த தானத்தின் அவசியத்தையும் பிரதமர் Trudeau வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்ட அவசரகால சட்டசபை அமர்வு

Ontario மாகாண சட்ட சபையில் COVID-19 தொடர்பான இரண்டு அவசரகால சட்டங்கள்  இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுக்கு அமைவாக, இன்றைய அமர்வில் சபாநாயகர் உட்பட 24 மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டனர். இன்றைய அமர்வில் Scarborough Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினரும் தமிழருமான விஜய் தணிகாசலமும் கலந்து கொண்டிருந்தார்.

தொடரும் மரணங்கள்

Ontario மாகாணத்தில் இன்று இரண்டாவது COVID-19 தொடர்பான மரணம் உறுதி செய்யப்பட்டது. British Colombia மாகாணத்திலும் இன்று COVID-19 தொடர்பான மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. Alberta மாகாணத்தில் முதலாவது  COVID-19 தொடர்பான மரணமும் பதிவாகியுள்ளது.

சுய தனிமையில் வெளிவிவகார அமைச்சர்

COVID – 19 முன்னைச்சரிக்கையாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் சுய தனிமையில் உள்ளார். COVID-19 சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் தான் சுய தனிமையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர்  Francois-Philippe Champagne தெரிவித்தார். ஐரோப்பாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தில் இருந்து திரும்பிய 14 நாட்களுக்குள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை தான் அனுபவிக்கத் தொடங்கியதால், இந்த முன்னைச்சரிக்கை நகர்வை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

COVID-19 நோயாளர்கள் உள்ள பயணக் கப்பலில் கனடியர்கள்

COVID – 19 நோயாளர்களுடன் உள்ள பயணக் கப்பலில் குறைந்தது 77 கனடியர்கள் உள்ளதாக உலகளாவிய விவகாரங்களுக்கான கனடிய அமைச்சு தெரிவித்தது. 1,400க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்ட இந்தக் கப்பல் பிரெஞ்சு மத்திய தரைக்கடல் துறைமுகமான Marseille செல்கிறது. இந்தக் கப்பலில் உள்ள கனடியர்களுக்கு தூதரக உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக உலகளாவிய விவகாரங்களுக்கான கனடிய அமைச்சு தெரிவித்தது.

சர்வதேச விமான சேவைகளை படிப்படியாக நிறுத்தும் Air Canada

March மாதம் 31ஆம் திகதிக்குள் தனது பெரும்பாலான சர்வதேச விமான சேவைகளை படிப்படியாக நிறுத்துவதாக Air Canada நிறுவனம்  தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் தொடர்பாக அரசாங்கங்களின் முடிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவை Air Canada எடுத்துள்ளது. ஆனாலும்  கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் தொடர்ந்தும் சேவை செய்யத்  தயாராகவுள்ளதாக நிறுவனம்  Air Canada தெரிவித்துள்ளது.

மூடப்படும் Toronto காவல் நிலையங்கள்

Torontoவின் அனைத்து காவல் நிலையங்களும் பொதுமக்களுக்கு மூடப்படுகின்றன. Toronto காவல்துறையின் பொதுமக்கள் உறுப்பினர் ஒருவர் COVID-19க்கு சாதகமான சோதனை செய்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

TTC ஊழியருக்கும் COVID-19

Toronto போக்குவரத்து சபையின் ஊழியர் ஒருவர் COVID-19 தொற்று நோயிக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். பொறிமுறையாளர் ஒருவரே இவ்வாறு சாதகமாக சோதனை செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதன் எதிரொலியாக 170, TTC ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

Related posts

மேஜர்-ஜெனரல் Dany Fortin தவறான பாலியல் நடத்தையில் ஈடுபடவில்லை

Lankathas Pathmanathan

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment