September 28, 2026
தேசியம்
செய்திகள்

அடுத்த ஆண்டு 60 சதவீத கனடியர்கள் அதிக அடமானக் கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும்: கனடிய மத்திய வங்கி!

அடுத்த ஆண்டு முதல் 60 சதவீத கனடியர்கள் அதிக அடமானக் கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய மத்திய வங்கி தெரிவித்தது.

2025, 2026-ஆம் ஆண்டுகளில் தங்கள் அடமானக் கடன்களைப் புதுப்பிக்கும் கனடியர்களில் சுமார் 60 சதவீதம் பேர் அதிக மாதாந்த கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய மத்திய வங்கியின் புதிய அறிக்கை குறிப்பிடுகிறது.

அடமான வட்டி விகிதங்கள் படிப்படியாகக் குறையும் என இந்த அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் பெரும்பாலான இந்த ஒப்பந்தங்கள் குறைந்த வட்டி விகித காலங்களில் கையெழுத்திடப்பட்ட நிலையில் அவை புதுப்பிக்கப்படும் போது அதிகரிப்பை காணும் என தெரிவிக்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு December மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அடமான கடன்களைப் புதுப்பிக்கும்போது, அவர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் சராசரியாக 10 சதவீதம் அதிகரிப்பு ஏற்படும் என இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

2026-ஆம் ஆண்டில், இந்த அதிகரிப்பு சுமார் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

234 கனேடியர்கள் ஞாயிறு காசாவை விட்டு வெளியேறினர்

Lankathas Pathmanathan

Ontario மாகாண தேர்தலில் Liberal தவிர ஏனைய பிரதான கட்சி தலைவர்கள் வெற்றி!

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முதல் தடவையாக1,800க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment