September 28, 2026
தேசியம்
செய்திகள்

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது!

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் Brampton நகர முதல்வர் Patrick Brown -க்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஒருவரை Peel பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

29 வயதான Kanwarjyot Singh Manoria செவ்வாய்க்கிழமை  (15) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

இவர் மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர் நகர முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், அவரது மனைவி, மகன் குறித்தும் இந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விசாரணை குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்ததை அறிந்து நிம்மதியடைந்தோம் என Patrick Brown தெரிவித்தார்

Patrick Brown அண்மையில் கொலை மிரட்டலுக்கு ஆளான நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என Peel பிராந்திய  காவல்துறையினர் இந்த வாரம் உறுதிப்படுத்தினர்.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் நகர முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

நகர முதல்வருக்கும் அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இரண்டு வாரங்கள் நீடித்ததாக Peel பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் Nick Milinovich உறுதிப்படுத்தினார்.

Related posts

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment