தேசியம்
செய்திகள்

வெளியுறவுத்துறையில் சேவை குறைப்பு?

பிரதமர் Mark Carney-யின் அரசாங்க செலவின குறைப்பு திட்டத்தில் வெளியுறவு சேவையும் அடங்குகிறது.

வெளியுறவு அமைச்சு தனது இருப்பை வெளிநாடுகளில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் 7.5 சதவீத சேமிப்பை அடையாளம் காணுமாறு நிதியமைச்சர் François-Philippe Champagne அமைச்சர்களிடம் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதங்களை அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை (07) அமைச்சர்களுக்கு  அனுப்பி,வைத்தார்.

இதில் வெளியுறவு அமைச்சும் அடங்கும் என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

ஆனாலும் மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சர் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் வெளியுறவுத் துறையில் செலவின குறைப்புகளை முன்னெடுப்பது குறித்து பல தரப்பிலும் கவலை வெளிப்படுத்தப்படுகிறது.

உலக அரங்கில் கனடாவின் இடத்தை கருத்தில் கொண்டு வெளியுறவுத் துறையில் செலவின குறைப்பை  கனடிய அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் வெளிநாட்டுத் தூதர்கள் தெரிவித்தனர்.

இது வெளிநாடுகளில் உள்ள கனடிய குடிமக்களைப் பாதுகாக்கும் திறனை பலவீனப்படுத்தும் என்ற அச்சமும்  இராஜதந்திரி வட்டாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Ontario: மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

கனடிய பெண்கள் கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் பதவி விலக்கல்

Lankathas Pathmanathan

Paris Paralympics: முதலாவது நாள் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment