September 13, 2026
தேசியம்
செய்திகள்

செம்மணி படுகொலை: நீதி கோரி நூற்றுக் கணக்கானோர் Toronto-வில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைகளுக்கு நீதி கோரி Toronto-வில் நடைபெற்ற கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மத்திய Toronto-வில் மக்கள் அதிகம் கூடும் Dundas சதுக்கத்தில் இந்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (6) பிற்பகல் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டி குரல் எழுப்பப்பட்டது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் நீதி கோரும் பதாதைகளை பலரும் ஏந்தியிருந்தனர்.

செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி தாயகத்தில்  முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான  கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த கண்டன போராட்டம்  இடம்பெற்றது.

Related posts

Quebec முதியவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசிகள் வழங்கல்

Lankathas Pathmanathan

Quebec முதல்வருக்கு COVID தொற்று

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 3ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment