தேசியம்
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிட மற்றுமொரு தமிழர் ஆர்வம்!

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மற்றுமொரு தமிழர் வெளிப்படுத்தியுள்ளார்.

Markham நகர நீண்டகால குடியிருப்பாளராக தன்னை அடையாளப்படுத்தும் ஆரணி முருகானந்தன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு June மாதம் 30-ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை முதலாவது வேட்பாளராக கிள்ளி செல்லையா தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

கனேடிய ஆயுதப் படைகளின் இரண்டாவது கட்டளை தளபதி தனது பதவியில் இருந்து விலகுகின்றார்

Gaya Raja

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan

அமெரிக்க அதிபர் கனடாவுக்கு பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment