தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்கிழமை கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி Volodymyr Zelenskyயின் உரை மெய்நிகராக செவ்வாய்கிழமை காலை 11:15 மணிக்கு இடம்பெறும்.

அவர் Senate சபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டாக உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் திட்டமிடப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முறைசாரா கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என அரசாங்க சபைத் தலைவர் Mark Holland சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

பிரதமர் Justin Trudeau, உக்ரைன் ஜனாதிபதிக்கு முன்னதாக உரையாற்றுவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்ற அனுமதிக்கப்படும்

Related posts

Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

Gaya Raja

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan

Quebecகில் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Comment