கடந்த பத்தாண்டுகளில் குற்றப் பின்னணி கொண்ட 17,600-க்கும் மேற்பட்டோர் கனடாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டனர்.
கனடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு (IRCC) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
2014 முதல் 2024 வரை, 25,350-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கனடாவுக்குள் நுழைய தங்கள் குற்றங்களை மன்னிக்க விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.
அவற்றில், 70 சதவீத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, 20 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, மேலும் 10 சதவீத விண்ணப்பங்கள் மீளப் பெறப்பட்டன.
கனடியர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.