தேசியம்
செய்திகள்

Alberta மாகாணத்தில் மூன்று இடைத் தேர்தல்!

Alberta மாகாணத்தின் மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது.

Edmonton-Strathcona, Olds-Didsbury-Three Hills  Edmonton-Ellerslie  ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (23) நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தலின் மூலம் Alberta NDP தலைவர் Naheed Nenshi சட்டமன்றத்தில் ஒரு இடத்தை பெற முயற்சிக்கிறார்.

Edmonton-Strathcona தொகுதியில் Naheed Nenshi போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் Alberta NDP முன்னாள் தலைவர் Rachel Notley இறுதியாக 80 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

Olds-Didsbury-Three Hills தொகுதியில் பிரிவினைவாத Alberta குடியரசுக் கட்சி தலைவர் Cameron Davies போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில்  குடியரசுக் கட்சி சில வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்க பட்டாலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் சட்டமன்ற சபாநாயகரும் நீண்டகால UCP சட்டமன்ற உறுப்பினருமான Nathan Cooper பதவி விலகியதை அடுத்து இந்த தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Edmonton-Ellerslie தொகுதியின் NDP உறுப்பினர் Rod Loyola பதவி விலகியதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

Related posts

New Brunswick சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம்

Lankathas Pathmanathan

Peel காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் குறித்த சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு TGTE அழைப்பு

Lankathas Pathmanathan

கனடாவின் அரச தலைவரின் மறைவுக்கு தொடரும் அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment