தேசியம்
செய்திகள்

கனடா Post, தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: அமைச்சர்

கனடா Post, தொழிற்சங்கம் ஆகியவை மீண்டும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அமைச்சர் கோரினார்.

கனடா Post , அதன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தை, மத்திய மத்தியஸ்தர்களுடன் இணைந்து மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு வேலைவாய்ப்பு அமைச்சர் Patty Hajdu கேட்டுக் கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது இரண்டு குறிக்கோள்களை கொண்டிருக்கும் என புதன்கிழமை (04) வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் தொடர வேண்டும் என அமைச்சர் Patty Hajdu கூறினார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பத் தயாராக உள்ளதாக அமைச்சர் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக கனடா Post தெரிவித்துள்ளது.

இதில் ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு அவசர நகர்வுகள்  தேவை என Patty Hajdu கூறினார்.

Related posts

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja

Ontario Liberal தலைமையின் முதல் வேட்பாளர்

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment