தேசியம்
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற பணிகள்!

வரி குறைப்பு சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்த நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் தனது பணிகளை ஆரம்பிக்கிறது.

புதிய சபாநாயகர், புதிய பிரதமர், பெரும் எண்ணிக்கையிலான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் புதன்கிழமை (28) மீண்டும் செயல்பட ஆரம்பிக்கிறது.

புதிய சபாநாயகர் Francis Scarpaleggia முதல் முறையாக நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்குவார்.

343 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் Mark Carney உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் April மாதம் நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீண்டும் தேர்தலில் வெற்றி பெறத் தவறிய Conservative தலைவர் Pierre Poilievre, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டார்.

முன்னாள் கட்சித் தலைவர் Andrew Scheer, இடைக்காலத் தலைவராக செயல்பட்டு நாடாளுமன்றத்தில் Conservative கட்சியை  வழிநடத்துவார்.

அரை நூற்றாண்டில் முதன் முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் செவ்வாய்க்கிழமை (27) சிம்மாசன உரையாற்றி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்தார்.

Related posts

Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும்!

Lankathas Pathmanathan

B.C. பேரூந்து விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு 12 ஆயிரம் டொலர் அபராதம்!

Gaya Raja

Leave a Comment