தேசியம்
செய்திகள்

Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும்!

Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும் என அரசாங்கத் தகவல் மூலம் தெரியவருகின்றது.

முதல்வர் Doug Ford நாளை (திங்கள்) இந்த அறிவித்தலை வெளியிடுவார் என கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கை நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் அதிகாலை 12:01 மணி முதல் மாகாணத்தில் உள்ள அத்தியாவசிய சில்லறை விற்பனையை தடைசெய்யும்.

COVID-19 modelling தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூடுதல் December 24ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு ஆரம்பமாகி மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் 28 நாட்களும், வடக்கு பகுதிகளில் 14 நாட்களும் நீடிக்கும் எனவும் தெரிய வருகின்றது. மாகாண அளவிலான கட்டுப்பாட்டின் கீழ், மாணவர்களுக்கான குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்படும் என கூறப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்த மூடுதல் குறித்த கூடுதல் விபரங்களை முதல்வர் வேலியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து முதல்வர் இந்த வார இறுதியில் சுகாதார அதிகாரிகளுடன் அவசர கூட்டங்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடடைக்காது.

Related posts

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் Mark Carney

Lankathas Pathmanathan

பின்லாந்து, ஸ்வீடன் NATOவில் இணைவதற்கு முதல் நாடாக கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

Leave a Comment