September 12, 2026
தேசியம்
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்!

Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்திற்கு புதிய நகரசபை உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட Markham நகரசபையின் 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் ஜுனிதா நாதன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக Markham நகரசபைக்கு ஜுனிதா நாதன்எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் செவ்வாய்க்கிழமை (27) நடைபெறும் நகர சபை கூட்டத்தில், இந்த நகரசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தப் பின்னணியில் 7-ஆம் வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்கு ஒரு உறுப்பினரை நியமிக்க நகரசபை முடிவு செய்துள்ளது.

இடைத் தேர்தலை நடத்தாமல், தற்போது வெற்றிடமாக உள்ள அவரது பதவியை நிரப்ப நகரசபை தயாராகி வருகிறது.

November 14, 2026 அன்று முடிவடையும் தற்போதைய பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்குப் பணியாற்ற நகரசபை உறுப்பினர்கள் ஒரு உறுப்பினரை நியமிப்பார்கள் என தெரியவருகிறது.

முன்னர் 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவி வெற்றிடமானபோது அந்த பதவிக்கு முன்னாள் நகரசபை உறுப்பினர் Khalid Usman இதே போன்ற முறையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி பெறுவார்கள்?

Lankathas Pathmanathan

அடுத்த மாதம் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா

Gaya Raja

Leave a Comment