September 28, 2026
தேசியம்
செய்திகள்

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்க கனடாவில் மன்னர்!

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் திங்கட்கிழமை (26)  கனடா வந்தடைந்தார்.

மன்னர் அவரது துணைவி ராணி Camilla-வுடன் வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கனடா வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னரின் முடிசூட்டு விழாவின் பின்னர், அரச குடும்பத்தினர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

அரச தம்பதியினர் தமது கனடிய வருகையின் முதல் நாளில் ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Mark Carney ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொண்டனர்.

முன்னதாக தலைநகர் Ottawa-வின் மையப்பகுதியில் உள்ள Lansdowne பூங்காவில் சமூக உறுப்பினர்களை அரச குடும்பத்தினர் சந்தித்தனர்.

மூன்று முதற்குடி அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் செவ்வாய்கிழமை (27) பங்கேற்கும் மன்னர் அரியணையில் இருந்து உரையாற்றவுள்ளார்.

1977-ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்த பின்னர், கனடாவின் அரசத் தலைவர் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது: தலைமை பொது சுகாதார அதிகாரி

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு கனடாவுடனான வர்த்தக உறவை பாதிக்கும்?

Lankathas Pathmanathan

Leave a Comment